செங்கோட்டை- தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நாளை முதல் நின்று செல்லும்.

by Editor / 21-04-2025 08:25:34pm
செங்கோட்டை- தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நாளை முதல் நின்று செல்லும்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலானது நாளை முதல் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 குறிப்பாக, செங்கோட்டை - தாம்பரம் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலானது தென்காசி, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை வழியாக இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ரயிலானது சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது செங்கோட்டை- தாம்பரம் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலானது சிதம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (22-ம் தேதி) முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : செங்கோட்டை- தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்

Share via