அடாவடி வசூலில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். 

by Editor / 15-06-2024 10:01:01pm
அடாவடி வசூலில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் வசித்து வருபவர் ஹரி. தனியார் நிறுவனத்தில் பணி செய்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தாயின் மருத்துவ செலவிற்காக தனியார் நிதி நிறுவனம் ஒன்றியிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் தொகையை கடனாக பெற்று இருந்தார் அந்த தொகைக்கான EMI ஐ  12 மாத தவணையாக கடந்த மூன்று மாதங்கள் கட்டி வந்து கொண்டிருந்தார். தன்னுடைய பழைய நிறுவனத்திலிருந்து பணியில் இருந்து வெளியேறிய அவர், வேறு நிறுவனத்திற்கு பணியில் சேர்ந்ததால் ஐந்தாம் தேதி வழங்கப்படும் சம்பளம் பத்தாம் தேதியாக மாறியுள்ளது. இந்நிலையில் நிதி நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய EMI யானது,  ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதியில் கட்ட வேண்டி இருக்க, அவரால் கடன் தொகை தொடர்ந்து சரிவர கட்ட முடியாமல் சில நாட்கள் கழித்து அபராத தொகையோடு EMI ஐ செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தவணைத் தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. நிதி நிறுவன ஊழியர்களுக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வந்து நிதி நிறுவன ஊழியர்களிடம் பேசி  சமாதானமாக அனுப்பி வைத்தனர் ஆர்பிஐ கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடன் தாரர்களை வீடு தேடி சென்று தகாத வார்த்தைகளை கூறி வசூல் செய்யும் போக்கில் ஈடுபடக்கூடாது என்று ஒரு அறிவிப்பு விடுத்திருந்தது. இருப்பினும் இது போன்ற சில தனியார் நிதி நிறுவனங்கள் அந்த அறிவிப்பினை கண்டு கொள்ளாமல்,  வாடிக்கையாளர்களை தரக்குறைவாகவும் அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் பேசி அடாவடி வசூலில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற அடாவடி வசூலில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்தும் நிதிநிறுவனங்களும் இதேபோக்கை கிராமங்களில் உள்ள பெண்களிடம் காட்டிவருவதும் அவர்களது வீட்டின்முன்பு வசூல்செய்யும் ஊழியர்கள் கூட்டமாக வந்து நிற்பதும் இரவு வரை தொடர்வதும் நடந்துவருகிறது.

 

Tags : அடாவடி வசூலில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 

Share via