வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்

by Staff / 16-06-2024 01:32:07pm
வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்

மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்க்கார்பராவில் உள்ள மகேஷ்தாலா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (ஜூன் 16) காலை பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்திற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. கேஸ் சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via