புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வு குழுவினர் விளக்கம்.

by Editor / 24-06-2024 11:49:41pm
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வு குழுவினர் விளக்கம்.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புதுநகர் பகுதியில் கழிவுநீர் குழாயில் விஷவாயி தாக்கி 3-பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆய்வு செய்த குழுவினர் விஷவாயு தாக்கியதற்கான காரணங்கள் குறித்து தெரிவித்துள்ளனர் அதில், 
கழிவறை இணைப்புகளில் 'S' அல்லது 'P' வடிவ நீர்க்காப்பு முறை (water) seal) இல்லாதது, முறையான ஆய்வு தொட்டிகள், வாயு வெளியேறும் குழாய்கள் பொருத்தப்படாதது ஆகியவை முதன்மைக் காரணங்களாக கண்டறிந்துள்ளதாகவும், மேலும் அதிகப்படியான வெப்பத்தின் மூலமாகவும் கழிவுநீர் குழாய்களில் H2S அமிலம் கூடுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினர்.
சம்பவம் நடந்த முதல் நாளான 10-06-2024 அன்று புதுவையின் வெப்பநிலை 39°C. இது தவிர கழிவு நீரில் சல்பேட் அளவு அதிகமாக இருந்ததும் H.S அதிகமாகி water seal இல்லாத இடங்களில் வெளியேறி இருக்கிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வு குழுவினர் விளக்கம்.

Share via