சங்கரநாராயணர் கோமதி அம்பாள் கோவிலில் ஆடித்தபசு திருவிழாவிற்கான கொடியேற்றம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் கோவிலில் ஆடித்தபசு திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று (ஜுலை 11) நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ,சட்டமன்ற உறுப்பினர் ராஜா,மதிமுக துணைப்பொதுச்செயலாளர் திமு ராசேந்திரன்,உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.
Tags : சங்கரநாராயணர் கோமதி அம்பாள் கோவிலில் ஆடித்தபசு திருவிழாவிற்கான கொடியேற்றம்