அமோனியா வாயு கசிவு; ஆட்சியர் அதிரடி உத்தரவு

by Staff / 20-07-2024 04:26:46pm
அமோனியா வாயு கசிவு; ஆட்சியர் அதிரடி உத்தரவு

அமோனியா வாயு கசிவு நடந்த தூத்துக்குடி நிறுவனத்தில் அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருவதால் தொழிற்சாலையில் இன்று (ஜூலை 20) எந்த பணிகளும் நடக்கக்கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் 29 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இன்று ஆலையில் வழக்கம் போல வேலைக்காக ஊழியர்கள் சென்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via