குற்றால மெயின் அருவியில் பாறை கற்கள்  விழுந்து சுற்றுலா பயணிகள் காயம்- பாறை கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

by Editor / 21-08-2024 11:24:52pm
குற்றால மெயின் அருவியில் பாறை கற்கள்  விழுந்து சுற்றுலா பயணிகள் காயம்- பாறை கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் காலம் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீராடி செல்கின்றனர்.இந்நிலையில், இன்று மாலை குற்றால மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறை கற்கள் உருண்டு விழுந்து சிதறியதில் 5 சுற்றுலா பயணிகள் பலத்த காயத்துக்கு உள்ளாகினர். தொடர்ந்து அவர்களை மீட்ட காவல்துறையினர் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி பகுதியில் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டது. 

 தென்காசி தீயணைப்பு துறையினர் மெயின் அருவி மேற்பகுதியில் வேர்கள் ஊடுருவி பாறையில் ஏற்பட்ட பிளவுகளால் வெடித்து விழும் நிலையில் இருந்த பாறைகளை அகற்றி வேர்களை சுத்தம் செய்தனர். தீயணைப்புத் துறையினரைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் போலீஸாரால் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளிக்கும் சூழல் ஏற்பட்டது.

குற்றால மெயின் அருவியில் பாறை கற்கள்  விழுந்து சுற்றுலா பயணிகள் காயம்- பாறை கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
 
Tags : குற்றால மெயின் அருவியில் பாறை கற்கள்  விழுந்து சுற்றுலா பயணிகள் காயம் பாறை கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

Share via