கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர்

by Editor / 14-08-2021 08:58:40pm
கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு  தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின்  வழங்கினார்.

தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சோப்போருக்கு, தகைசால் தமிழா் விருது அளிக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா். மேலும், அந்த விருது நிகழாண்டில் முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு அளிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின்  வழங்கினார். விருதை தொடர்ந்து ரூ.10 லட்சத்திற்கான கசோலையும் அவர் வழங்கினார். முதல்வருடன், அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்பி உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள, சங்கரய்யா இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் இந்த விருதினை வழங்கினார்.

 

Tags :

Share via

More stories