ஊருக்குள் புகுந்து காலையில் பிரஸ்ஸாக குளத்தில் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்.

by Editor / 15-09-2024 09:36:56am
ஊருக்குள் புகுந்து காலையில் பிரஸ்ஸாக குளத்தில் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வரும் நிலையில், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் வனவிலங்குகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஆங்காங்கே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இரண்டு யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கி பண்பொழி பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அதனை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டனர்.

ஆனால், எந்தவிதமான அச்சமும் இன்றி கூலாக யானையானது விவசாய நிலங்களுக்குள் இருந்து வெளியேறி அருகாமையில் உள்ள குளத்திற்கு சென்று காலையில் பிரஸ்ஸாக ஒரு குளியல் போட்டு நீச்சல் அடித்து ஆனந்த குளியலிட்டு சகஜமாக வெளியேறி நடந்த சென்றுள்ளது.

எந்தவிதமான அச்சமும் இன்றி சகஜமாக சென்ற யானையை அதனுடைய போக்கிலே விட்டு அதனை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் தற்போது வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சமீப காலமாக பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் ஊர் பகுதிக்குள் காட்டு யானை கூட்டம் என்பது புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில், யானைக் கூட்டங்களால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ஊருக்குள் புகுந்து காலையில் பிரஸ்ஸாக குளத்தில் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்.

Share via