விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தனூர் கிராமத்தில் பாக்கியா (90), தனலட்சுமி (100) தொந்திரெட்டிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் உயிரிழந்தனர். ஒருகோடி கிராமத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.