பாஜக பிரமுகர்கள் அடுத்தடுத்து விலகல் என்ன காரணம்..?
தமிழக பாஜகவில் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு எழுச்சியை நோக்கி பாரதிய ஜனதா கட்சி வேகமாக முன்னேறியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாஜகவின் வளர்ச்சி என்பது பின்னோக்கி செல்வதாக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கட்சியினுடைய வளர்ச்சிக்கும்,போராட்டக்களத்திற்கு வரதாவர்களுக்கும்,காட்சிநிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் தானாகவே நிகழ்வுகளை நடத்தும் நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருவதாகவும், எந்தவகையிலும் கட்சியினுடைய வளர்ச்சிக்கு பங்குவகிகாத்தவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுவருவதாகவும் மனக்குமுறல்கள் பாஜகவில் தற்போது அதிகளவில் எழுந்துள்ளநிலையில் இதன் ஒரு பகுதியாக தற்பொழுது தமிழகத்தில் மாநிலத் தலைவர், மாவட்ட தலைவர்கள், மண்டல தலைவர்கள், உள்ளிட்ட அனைவரும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவராக பணியாற்றி வந்த தயாசங்கர் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று இரவு அறிவித்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகமும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். மீண்டும் இவர்களுக்கு பொறுப்பு கொடுக்காததை அடுத்து இருவரும் விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய முக்கிய பொறுப்பாளர்கள் இருவர் விலகியது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags : பாஜக பிரமுகர்கள் அடுத்தடுத்து விலகல்