காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு பணியில் கோடி கணக்கில் ஊழல் - மரு.கிருஷ்ணசாமி.

தென்காசி பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு பணியில் கோடி கணக்கில் ஊழல் - இப்பணிகளை இந்த அறநிலைத்துறை அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்வதுடன் கோயில் கும்பாபிஷேக விழாவை ஆறு மாதம் தள்ளி வைக்க வேண்டும் என கோயிலை பார்வையிட்ட பின்னர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி
தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு காலம் பழமையானதாகவும் பிரசித்தி பெற்றதாகவும் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா வருகின்ற ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து கோயில் கோபுரங்கள் மண்டபங்கள், புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என இந்த அமைப்புகள், சிவனடியார்கள் குழுவினர் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர்.கிருஷ்ணசாமியிடம் முறையிட்டனர்.
இது தொடர்பாக இன்று நேரடியாக திருக்கோயில் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
திருக்கோயில் பராமரிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை ஆங்காங்கே கோயில் கோபுரங்களில் விரிசல்கள் உள்ளன. இவைகளை பெயரளவிற்கு மட்டும் பூடி மொழுகி உள்ளனர். அந்த வகையில் திருக்கோயில் பராமரிப்பு பணியில் அணைத்து செய்யப்பட்டதாக கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுகிறது. எனவே இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக கோயிலை ஆய்வு செய்வதுடன் பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறுகிறதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இப்பணிகள் முழுமையாக முடியும் வரை ஆறு மாத காலத்திற்கு கும்பாபிஷேக விழாவை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags : காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு பணியில் கோடி கணக்கில் ஊழல் - மரு.கிருஷ்ணசாமி.