ஒரே பெருங்கனவு தான்.. கனத்த இதயத்துடன் விலகுகிறேன்..” - நாதகவில் இருந்து வெளியேறிய காளியம்மாள்
நாம் தமிழர்க் கட்சியில் இருந்து மாநில பொறுப்பாளர்கள் முதல் ஒன்றிய பொறுப்பாளர்கள் வரை பலரும் தொடர்ந்து விலகிவருகின்றனர். இந்நிலையில், கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாளும் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராமல் தகவல்களாக மட்டுமே இருந்தது.இந்நிலையில், இன்று காளியம்மாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கட்சியில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும் நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா தங்கையாகவும் அண்ணன் தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன்.
Tags :



















