இயங்கி வந்த ட்ரான்ஸ்பார்மரை கழற்றி சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கீழ கடையம் பாதுகாத்து அம்மன் கோயில் அருகே உள்ள டிரான்ஸ்பாரம் நல்ல நிலையில் இயங்கி வந்தது. ஆனால் வேறு எங்கோ டிரான்ஸ்பார்மர் பழுதாகி விட்டது என்று கூறி நல்ல நிலையில் இயங்கி வந்த அந்த ட்ரான்ஸ்பார்மரை கழற்றி எடுத்துக் கொண்டு வேறு எங்கோ நிறுவியுள்ளனர். இதன் காரணமாக கீழக்கடையும் பகுதியில் மின்னழுத்த குறைவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் உடனடியாக மாற்று ட்ரான்ஸ்பார்மர்களை கொண்டு சீர் செய்ய வேண்டுமே தவிர நல்ல நிலையில் இயங்கி வந்த ட்ரான்ஸ்பார்மரை கழற்றி சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. மின்னழுத்த குறைவால் அந்தப் பகுதியில் ஏதேனும் சாதனங்கள் பழுதடைந்தால் அதற்கு மின்வாரியமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆகவே மின்மாற்றியை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். கே. ரவி அருணன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
Tags :