சிக்கலுக்குமேல் சிக்கலில் சீமான்..? 

by Editor / 28-02-2025 09:36:20am
சிக்கலுக்குமேல் சிக்கலில் சீமான்..? 

பெரியாரை இழிவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்க உள்ளனர்

காவல் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான போலீசார் சற்று நேரத்தில் சீமான் வீட்டுக்கு வந்து சம்மன் வழங்க இருக்கின்றனர்

பாலியல் வழக்கில் நீலாங்கரையில் சீமானின் இல்லத்தில் நேற்று ஒட்டப்பட்ட  சம்மன் கிழிக்கப்பட்டதை அடுத்து விசாரிக்கச் சென்ற போலீசாரை, வீட்டின் பாதுகாவலர் தாக்கியதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி புகாரில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : சிக்கலுக்குமேல் சிக்கலில் சீமான்..? 

Share via

More stories