சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு பாளை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியை விமலா தேர்வு.

இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் கடந்த 1955-ம் ஆண்டு முதல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம் சார்ந்த விருதுகளில் இது உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன.
மலையாளத்தில் வெளியான 'எண்ட ஆண்கள்' என்ற நாவல் நளினி ஜமீலாவின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று நூலாகும். இந்திய சமூகத்தில் பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, அவர்களது போராட்டங்கள் போன்ற பல முக்கியமான அம்சங்களை இந்த நூல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியை விமலா தமிழில் திறம்பட மொழிபெயர்த்துள்ளார். இதற்காக, இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மொழி பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது குறித்து விமலா செய்தியாளர்களிடம் கூறும்போது, பேராசிரியை விமலா கூறியதாவது, 'கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த நான் எனது குடும்பத்தின் முதல் பட்டதாரி. என்னுடைய விதவைத் தாய், படிப்பின் மீது நான் கொண்ட ஆர்வத்தின் காரணமாக மிகுந்த இன்னல்களுக்கு இடையே என்னை படிக்க வைத்தார். என்னை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எனது மூத்த சகோதரி தனது படிப்பினை கைவிட்டார். முதுநிலை கல்விக்கு பிறகு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். கூடுதலாக ஒரு மொழியாக மலையாளத்தை தேர்வு செய்து நன்கு கற்று தேர்தேன். இதனால்தான் என்னால் மலையாளத்திலிருந்து இந்த நாவலை தமிழில் சிறப்பாக மொழி பெயர்க்க முடிந்தது. உலக மகளிர் தினத்தில் இந்த விருது தேடி வந்தது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்,” என்றார்.
Tags : Palai Thuya Saveriyar College Professor Vimala selected for Sahitya Akademi Award for Best Translation