20 தெருநாய்களை ஏற்றிவந்த வாகனம் பிடிப்பட்டது.

கன்னியாகுமரி: கேரளாவில் இருந்து 20 தெருநாய்கள் வாகனத்தில் ஏற்றிவரப்பட்டன. அதனை கன்னியாகுமரி மாவட்டம் கட்டச்சல் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிலர் இறக்கிவிட்டுச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, நாய்களை இறக்கிவிட்டுச் சென்ற வாகனத்தை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். முன்னதாக, சோதனைச்சாவடியில் அதிகாரிகள் கேட்டபோது தடுப்பூசி போட நாய்களை அழைத்துச் செல்வதாக பொய் கூறியுள்ளனர்.வாகனம் பறிமுதல்,2 நபர்கள் பிடிப்பட்டுள்ளனர்.அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : 20 தெருநாய்களை ஏற்றிவந்த வாகனம் பிடிப்பட்டது.