அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

by Editor / 28-04-2025 10:06:03am
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும் அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல் செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

2010 முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு பெறலாம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண்டர் விடுப்பு இந்தாண்டு செயல்படுத்த கோரிக்கை வைக்கபப்ட்டுள்ளது. 1-10-2025 முதல் சரண்டர் விடுப்பு பயன்பெறலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

"அரசு ஊழியர்களுக்கான பண்டிகைகால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படுகிறது, ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது, ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைகால முன்பணம் ரூ.6000 ஆக அதிகரிக்கிறது" 

 

Tags : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Share via