அமெரிக்கப்படைகள் உடனே வெளியேற வேண்டும்... ஆப்கனில் தலிபான்கள் திட்டவட்டம்...

by Admin / 25-08-2021 01:00:30pm
அமெரிக்கப்படைகள் உடனே வெளியேற வேண்டும்... ஆப்கனில் தலிபான்கள் திட்டவட்டம்...

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற கெடு நீட்டிப்பு கிடையாது என்று தலீபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

 ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்

ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், தலீபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  அமெரிக்க படைகள் வெளியேற கெடுவை நீட்டிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறினார்.

வரும் 31-ந் தேதிக்குள், அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்றும் பணியை முடிக்க வேண்டும் என எச்சரித்துள்ள அவர், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.

ஏ.வுக்கும், தலீபான்களுக்கும் இடையே சந்திப்பு நடந்ததா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார். மேலும், நாட்டில் இயல்புநிலை திரும்பி வருவதாக குறிப்பிட்ட தலிபான் செய்தி தொடர்பாளர், விமான நிலையத்தில்தான் குழப்பம் நிலவு வருவதாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via