தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

by Editor / 19-05-2025 10:35:09am
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.இதேபோன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியிலும் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் திருப்பத்தூரிலும் வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், திருச்சியிலும் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.தொடர்ந்து கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில், துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

Tags : தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

Share via