சீனாவில் நிலச்சரிவு 4 பேர் பலி

சீனாவின் குய்சோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 10 வீடுகள் இடிந்து விழுந்து மண்ணில் புதைந்தன. சாங்ஷி நகரத்தில் இரண்டு உடல்களும், கிங்யாங் கிராமத்தில் இரண்டு சடலங்களும் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. மேலும், நிலச்சரிவில் சுமார் 19 பேர் மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகின்றது. அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags :