மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாடற்று கிடந்த 17 கிலோ கஞ்சா.

by Editor / 29-05-2025 12:04:33am
மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாடற்று கிடந்த 17 கிலோ கஞ்சா.

புருலியா - திருநெல்வேலி வாராந்திர ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ரயில்வே காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, விரைவு ரயிலின் பின்புறத்தில் இணைக்கப்பட்ட பொதுப் பெட்டியில் இரண்டு பேக்குகள் கேட்பாரற்று கிடந்தன, அதனை சோதனை செய்த போது 17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவில் கஞ்சா பொட்டலங்களை ஒப்படைத்தனர்.

மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டது, யாருக்கு அனுப்பப்பட்டது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags : மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாடற்று கிடந்த 17 கிலோ கஞ்சா.

Share via