எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலைக் கல்லூரி முன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இபிஎஸ், கோயில் வருமானத்தில் திமுக அரசு கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என்று கூறியிருந்தார். இந்நிலையில், இபிஎஸ்க்கு கண்டனம் தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :