அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின்

கடந்த 2018ல் அன்றைய பாஜக தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக, பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுல்தானிபூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ராகுல் காந்திக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்திற்கு சென்று ஜாமின் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags :