ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில் ஏழு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

by Admin / 17-02-2026 12:39:30am
ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில் ஏழு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநில பிவாடியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில் ஏழு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பிவாடி பகுதியில் உள்ள குஸ்கரா கரோலி தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைந்துள்ளது. நேற்று காலை 9:30 மணி அளவில் ஆலைக்குள் பயங்கர வடிச்சத்தம் கேட்டதுடன் வேகமாக தீ பரவியது. துணி ஆலை நடத்துவதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தின் போது சுமார் 20 முதல் 25 பணியாளர்கள் உள்ளே இருந்தனர் என்றும் இதில் ஏழு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் மேலும் இரண்டு முதல் 10 தொழிலாளர்கள் வரை உள்ளே சிக்கிருக்கலாம் என்றும் தெரிகிறது. இந்த துயரம் நிறைந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் முதல்வர் பஜ்ருலால் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்துக்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில் ஏழு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
 

Tags :

Share via