அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்கப் போவதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அச்சுறுத்தி உள்ளது.

by Admin / 01-04-2026 10:35:27am
 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்கப் போவதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அச்சுறுத்தி உள்ளது.

 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்கப் போவதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அச்சுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஆப்பிள், கூகுள், மெட்டா ,மைக்ரோசாப்ட் ,ஐபிஎம், டெஸ்லா, போயிங் மற்றும் என்பிடியா உள்பட மொத்தம் 18 நிறுவனங்களை பட்டியலிட்டு உள்ள ஈரான் அதனை தாக்க ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானிய அதிகாரிகளின் படுகொலைக்கு இந்த நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு தொழில் நுட்ப ரீதியாக உதவுகின்றன என்று ஈரான் குற்றம் சாட்டி உள்ளது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக அலுவலகங்களை விட்டு வெளியேறுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டின் எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டால் பதிலுக்கு பிராந்திய பகுதியில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமான எரிசக்தி உள்கட்ட அமைப்புகளையும் தாக்குவோம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஏற்கனவே எச்சரித்து இருந்தார். அமெரிக்க அதிபர்  ஹார்முஸ் ஜல சந்ததி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்பதாக விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க ...அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்கப் போவதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அச்சுறுத்தி உள்ளது.
 

Tags :

Share via