வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்க உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த பணி ஏப்ரல் 17ஆம் தேதி அன்று நிறைவு பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது m வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று இந்த வாக்கு சீட்டுகளை வழங்குவார்கள் வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் எந்த வரிசை எனில் உள்ளது என்றும் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் போன்ற விவரங்கள் எளிதாக தெரிந்து கொள்ள இது உதவும். கடந்த தேர்தலில் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டு இந்த மரம் புகைப்படம் இடம் பெறாமல் வழங்கப்பட உள்ளது.
வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் அல்லது பான் கார்டு கொண்ட மாற்று அடையாளம் ஆவணங்களை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம் இது குறித்த அதிக தகவல் தேவைப்படுவோர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான elections.tn.gov.in பக்கத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
Tags :



















