10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

by Admin / 23-05-2026 01:43:53pm
 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

கோவை கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக குறிப்பிட்டு அவர்,சிறுமி காணாமல் போன சில மணி நேரங்களிலேயே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளதோடு தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தற்போதைய அரசு பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் வெறும் விளம்பர நடவடிக்கைகள் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் விமர்சித்து உள்ளதோடு இந்த கொடூர கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு சட்டப்படி மிக கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் வெறும் விளம்பர அரசியலுடன் நின்றுவிடாமல் பெண்களுக்கு உண்மையான மற்றும் நிலையான பாதுகாப்பு அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அரசு பெரும் ரீல்ஸ் அரசாக இல்லாமல் களத்தில் இறங்கி செயல்படும் ரியல் அரசாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo