வியட்நாமில் இந்தியர்கள் 15 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர்.
வியட்நாமிற்கு இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தியர்கள் 15 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். வியட்நாமின் பூ குலோக்தீவு அருகே படகில் பயணித்துக் கொண்டிருந்த இந்திய சுற்றுலா பயணிகள் சென்றபடகு விபத்துக்குள்ளானது. அதில் உயிரிழந்த 15 பேரில் 10 பேர் தமிழர் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் உயிரிழந்த தமிழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு அவர்களுடைய உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான பணியை மேற்கொள்ள பணித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 32 இந்திய பயணிகளும் மூன்று படகு ஓட்டுனர்களும் படகில் பயணித்துள்ளனர். அதில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 18 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.விபத்திற்கு மோசமான வானிலையை காரணம் என்று தெரிய வந்துள்ளது.
Tags :



















