திருமணம் நிச்சயமான மாப்பிள்ளை விபத்தில் பலி.. மணப்பெண் தற்கொலை

by Editor / 12-05-2026 03:00:09pm
திருமணம் நிச்சயமான மாப்பிள்ளை விபத்தில் பலி.. மணப்பெண் தற்கொலை

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயா நந்தன். இவரது மகள் பிரபல்லா (23). இவருக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணி விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரபல்லா, தற்கொலை செய்துகொண்டார்.

 

Tags :

Share via
Logo