2 பில்லியன் டாலர் நஷ்டம்? உற்பத்தி ஆலைகளை மூடும் FORD

by Editor / 11-09-2021 02:56:16pm
2 பில்லியன் டாலர் நஷ்டம்? உற்பத்தி ஆலைகளை மூடும் FORD

 

இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை ஃபோர்டு நிறுவனம் மூட முடிவெடுத்துள்ளதாக தகவல்.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனம் ஃபோர்டு. உலகின் கார் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஃபோர்டு தற்போது நான்கில் ஒரு பங்கு கார் உற்பத்தி கூட நடைபெறாத நிலையில் உள்ளதாம். இதனால் சுமார் 2 பில்லியன் டாலர் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

எனவே இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை ஃபோர்டு நிறுவனம் மூட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் மூடப்பட்டவிட்டது.

மேலும் இனி வரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தொடரும் என தெரிகிறது. ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் இந்தியாவில் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டும் என கூறப்படுகிறது

 

Tags :

Share via