என்னை பழி தீர்க்கின்றனர்: டில்லி போலீஸ் கமிஷனர்ரா கேஷ் அஸ்தானா

by Editor / 18-09-2021 12:24:25pm
என்னை பழி தீர்க்கின்றனர்: டில்லி போலீஸ் கமிஷனர்ரா கேஷ் அஸ்தானா

குஜராத் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், டில்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப் பட்டார்.மனு தாக்கல்இதை எதிர்த்து, பொதுநல விவகார மையம், பொதுநல மையம் ஆகியவை டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுவில், பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக ராகேஷ் அஸ்தானா நியமனம் உள்ளதால், அதை செல்லாது என அறிவிக்கும்படி கோரப்பட்டுஇருந்தது. இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக நான் நியமிக்கப்பட்டதில் இருந்தே எனக்கு எதிராக சிலர், தொண்டு நிறுவனங்களின் பெயரில் பழி தீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் எனக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது. அதற்கான காரணம் தெரியவில்லை.பொதுநல மனு என்ற பெயரில், என்னை பழி வாங்க சட்ட நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.

இது சட்டத்தை அவமதிப்பதாகும். இதை அனுமதிக்கக் கூடாது. எனவே, என் நியமனத்தை ரத்து செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via