மருத்துவ சிகிச்சையில் இருந்த 8வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஊழியர் கைது

by Editor / 10-12-2021 04:09:26pm
மருத்துவ சிகிச்சையில் இருந்த  8வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஊழியர்  கைது

 
சென்னை சேத்துப்பட்டில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்தசில நாட்களாக 8 வயது சிறுமி  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் சிறுமியின் தாய் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை காப்பாற்றி மருத்துவமனை ஊழியரை தாக்கி உள்ளனர்.
 
பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரான மோனுராம் என்பவரை கைது செய்தனர். 

 

 

Tags :

Share via