செங்கோட்டை-கொல்லம் இடையே 15ஆம் தேதி முதல் பயணிகள் சிறப்பு விரைவு ரயில் இயக்கம் .

by Editor / 11-12-2021 01:28:40pm
செங்கோட்டை-கொல்லம் இடையே 15ஆம் தேதி முதல் பயணிகள் சிறப்பு விரைவு ரயில் இயக்கம் .

செங்கோட்டை - கொல்லம் முன்பதிவற்ற விரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 15 முதல் செங்கோட்டையில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 03.35 மணிக்கு வண்டி எண் 06559 கொல்லம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06660 கொல்லம் - செங்கோட்டை முன்பதிவற்ற விரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 16 முதல் கொல்லத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.20 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். இந்த ரயில்கள் பகவதிபுரம், நியூ ஆர்யங்காவு, தென்மலை, எடமன், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, எழுகோன், குன்டரா, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

Tags :

Share via