14 வயது சிறுமியை கடத்தியா வாலிபர்... போக்சோ சட்டத்தில் கைது...

by Admin / 21-12-2021 10:04:06am
14 வயது சிறுமியை கடத்தியா வாலிபர்... போக்சோ சட்டத்தில் கைது...

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 14 சிறுமி 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை என அவரது தாய் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுமிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இணையதள வகுப்பு நடைபெற்ற போது சிறுமியின் பெற்றோர் இணையதள வகுப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக சிறுமி இணையதள வகுப்பில் படித்து வந்த சிறுமி சமூக வலைதளமான ஷேர் சாட் மூலமாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா ஆலங்காடு பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் சின்னராஜா என்ற வாலிபர் செல்போனில் மூலமாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் செல்போன் சிக்னலை வைத்து சிறுமி வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இருப்பது தெரியவந்தது. திட்டக்குடி போலீசார் விரைந்து சென்று சிறுமியையும் கடத்தி சென்ற சின்னராஜா ஆகியோரை வேளாங்கண்ணியில் இருந்து மீட்டு திட்டக்குடி அழைத்து வந்தனர். திட்டக்குடி போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சின்னராஜாவை கைது செய்தார்.

 

Tags :

Share via

More stories