இத்தனை சீட் கொடுத்தால்தான் கூட்டணி - பிரேமலதா உறுதி

நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளோடு கூட்டணி வைக்க தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விரும்பவில்லை என்றும் நான்கு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவைக் கேட்டு கண்டீசன் போடுதாகவும் தகவல். பா.ஜ.க வோடு கூட்டணி வைக்க பிரேமலதா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்... கடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட சுதீஷ் மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு உள்ளது. தே.மு.தி.கவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க அ.தி.மு.கவும் முயன்று வருகிறது..
Tags :