குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர்  விமான நிலையத்தில் கைது. 

by Editor / 20-10-2023 11:21:32pm
குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர்  விமான நிலையத்தில் கைது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள .அய்யாபட்டி, ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ் வயது 36 இவர் துபாயில் பிளம்பர் ஆக பணிபுரிந்து வருகிறார்

இன்று மதியம் ஒரு மணி அளவில் ராஜேஷ் துபாயிலிருந்து  மதுரை வந்த ஸ்பை ஜெட் விமானத்தில் மதுரை வந்தடைந்தார் அவரிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் அவர் மீது 2012 ஆம் ஆண்டு குழந்தை திருமணம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

ராஜேஷ் தலைமறைவாக இருந்தது வந்த நிலையில் அவர் தேடப்படும் குற்ற வழியாக அறிவிக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் அறிவிப்பு ஓட்டப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகள் கழித்து  ராஜேஷ் மதுரை வந்தபோது மதுரை விமான நிலையத்தில் பிடிபட்டார். இதனை தொடர்ந்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேலும் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவான வாலிபர் 11 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டது குறித்து மதுரை விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது

 

Tags : குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர்  விமான நிலையத்தில் கைது. 

Share via

More stories