தரமில்லாத பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டதாக செல்வராஜ் குற்றச்சாட்டு

by Staff / 08-04-2022 05:21:45pm
தரமில்லாத பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டதாக செல்வராஜ் குற்றச்சாட்டு

தரமில்லாத பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்தைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி எதன் அடிப்படையில் தரமில்லாத பொருள்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்ட படுவதாக கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல இடங்களில் பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்ததாகவும் திருவண்ணாமலை ஆட்சியர் குடோனுக்கு சென்று பொருள்களை கொடுக்க வேண்டாம் என கூறியதாகவும் அதற்கு பதில் அளித்த அமைச்சர் வேலு திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் பொங்கல் பரிசு முறையாக சென்று சேர்ந்ததாகவும் குடோனில் காற்றோட்டம் இல்லை என்றால் பொருள்கள் கசிவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via

More stories