உரிய முறையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது

by Staff / 08-06-2022 01:02:21pm
உரிய முறையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது


ஆம்பூர் அருகே உரிய முறையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் மஞ்சம்பட்டி மற்றும் உமராபாத் பகுதியில் உள்ள இரு மருந்து கடைகளில் போலி மருத்துவர்கள் குறித்த தொடர் புகாரின் பேரில் ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். உரிய மருத்துவம் படிக்காமல் இரண்டு பேரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories