வீடு வாங்கியவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த உரிமைக்கான கடிதம் 200 குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி

by Editor / 17-07-2022 03:41:00pm
வீடு வாங்கியவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த உரிமைக்கான கடிதம் 200 குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமைக்கான கடிதம் கிடைத்துள்ளது. அமரபலி சித்தி வளாகத்தில் 200 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதனை வாங்கியவர்கள் சட்ட சிக்கலில் சிக்கிய திவாலாகிப் போன கட்டுமான நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு வாங்கியவர்களுக்கு உரிமை பத்திரம் வழங்கப்பட்டது. கடும் உழைப்பால் சேமித்த பணத்தில் வாங்கிய கனவு இல்லம் ஒருவழியாக கையில் கிடைத்தால் குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo