தேஜஸ்வி தான் ஆக்டிங் முதல்வராக..செயல்படுவார்

by Admin / 11-08-2022 04:47:38pm
 தேஜஸ்வி தான்  ஆக்டிங்  முதல்வராக..செயல்படுவார்

பாரதிய கட்சியினரோடு  கூட்டணி வைத்து  ஆட்சி  அமைத்த  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் .திடிரென கூட்டணியிலிருந்து  விலகியதாக  அறிவித்ததோடு ,முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா  செய்தார்  .பின்னர்  திடிரென   தேஜஸ்வி   யாதவுடன்   கைகோர்த்து   மீண்டும் முதலமைச்சராக  பதவி  ஏற்றார். நாற்பதுக்கும்  மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட நிதிஷ் குமார்    முதல்வராக    ஆக ,  எழுபதிற்கும்   மேற்பட்ட    சட்டமன்ற    உறுப்பினர்கள்
உடைய   தேஜஸ்வி  யாதவ்  துணை முதல்வராகப் பதவி ஏற்று  நிதிஷ் குமாரிடம் ஆசிபெற்றார் .பா.ஜ.க  விலிருந்து  விலகி.அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஒரு மாநிலக்கட்சியோடு  கூட்டணி வைத்திருப்பது  .நிதிஷ் குமாருக்கு  போக..போக. ..பிரச்சனையை  உருவாக்குமென்றும் தேஜஸ்வி தான்  ஆக்டிங்  முதல்வராக..செயல்படுவார்  என்றும் சொல்லப்படுகிறது .  அரசியலில்   எது. எப்பொழுது. ...எப்படி  நடக்குமென்று  அரசியல்  வியூகத்தினராலும்  கணிக்க  இயலாது.
 

 

Tags :

Share via