வங்கி வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி68 இலட்சத்தை கையாடல் செய்த மேலாளர் கைது
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதன்மை மேலாளராகப் பணிபுரியும் கிருஷ்ணன் என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் வடக்கு காருக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கல்லிடைக்குறிச்சி மற்றும் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள தங்களது வங்கி கிளையில் கிளை மேலாளராக பணிபுரிந்த காலகட்டத்தில் வங்கி கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியில் இருந்து ரூ. 67 இலட்சம் பணத்தை வைப்பு நிதி முதிர்வடையும் காலத்திற்கும் முன்பே மோசடியான முறையில் அவர்கள் கணக்கிலிருந்து கையாடல் செய்துள்ளார். மேற்படி வங்கி கிளை மேலாளர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மேற்படி முதன்மை மேலாளர் கிருஷ்ணன் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் (பொறுப்பு), க்கு உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்து ,உதவி ஆய்வாளர்.ராஜேஸ்வரி மற்றும் தலைமை காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வங்கி வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியை கையாடல் செய்த நடராஜனை இன்று கைது செய்தார். மேற்படி மோசடி குற்றச்சாட்டு காரணமாக வங்கி கிளை மேலாளர் நடராஜன் வங்கி நிர்வாகத்தால் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Tags :