36 செயற்கைக்கோளுடன் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட்

by Staff / 22-10-2022 12:34:30pm
36 செயற்கைக்கோளுடன் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட்

இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 கனரக ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. இத்திட்டமானது இஸ்ரோவின் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் 'ஒன்வெப்' நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

 

Tags :

Share via