தேர்தல் ஆணையத்தின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தினை வரவேற்கிறோம்-கடம்பூர் ராஜீ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி அத்தை கொண்டானில் நியாயவிலைக்கடை புதிய கட்டிடம் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது:ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தினை இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் அதிமுக ஆதரித்துள்ளது . நாட்டு நலன் கருதி இந்த கருத்தினை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிரதமர் மோடி கூறினால் அரசியல் ரீதியாக பார்க்கப்பட்டது.ஆனால் அதை நடைமுறை படுத்துகின்ற தேர்தல் ஆணையமே இன்றைக்கு கூறியிருப்பது வரவேற்கக் கூடியது. நாடு முழுவதும் முறை தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அந்த நடைமுறையை கொண்டு வருவது சவாலான விஷயம்தான் .ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக பண வீக்கம் குறையும், மக்களுக்கு பிரச்சினை இல்லாத சுமுகமான நிலை ஏற்படும் . ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கக் கூடியது.இன்னும் இருபது ஆண்டுகள் திமுக ஆட்சி என்று தான் முதல்வர் கூறியிருக்கிறார்.அடுத்து அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும் என்றார்.
Tags : We welcome the idea of the Election Commission that one country is one election - Kadampur Rajee