கார்கே தலைமையில் காங்கிரஸ் வலுப்பெறும்: சோனியா காந்தி

by Staff / 26-10-2022 02:32:37pm
கார்கே தலைமையில் காங்கிரஸ் வலுப்பெறும்: சோனியா காந்தி

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையால் கட்சி வலுவடையும் என்று நம்புகிறேன். புதிய காங்கிரஸ் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து தனது கடின உழைப்பின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு உயர்ந்திருப்பது தனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது.

 

Tags :

Share via