தமிழக கேரளா எல்லையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கரிப்பாடு பகுதியில் உள்ள கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் புளியரை வழியாக அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.தமிழக கேரளா எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் தமிழக எல்லை பகுதியானபுளியறையில் மூன்று குழுவினர் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், இக்குழுவில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், மற்றும் 2 உதவியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் வாகனங்களுக்கு நோய் தடுப்புக்கு கிருமி நாசினி மருந்து தெளிப்பதுடன் கேரளாவிலிருந்து வரும் பறவை இனங்கள் மற்றும் தீவனங்களை கண்டறிந்து திருப்பி அனுப்பி வருகின்றனர் பறவை இனங்களுக்கு பரவும் நோய் தாக்குதல் இல்லை என்ற கேரள அரசின் சான்று பெற்றிருந்தாலும் உயர் அதிகாரிகள் முறையான உத்தரவு பெட்ரா பின்னரே வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கோழிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் மீண்டும் தமிழகம் திரும்பும்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்பு தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
Tags :