முதல்வர் ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ கேக்

திருச்சி சத்திர பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உருவத்தில் 6 அடி உயரம், 92கி எடை கொண்ட பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவரை உற்சாகப்படுத்தும் விதமாகவும் இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. 90கி சர்க்கரை, 80 முட்டை கொண்டு 4 பேர் இந்த கேக்கை தயாரித்தனர்.

Tags :