பாட்னா ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 20-12-2022 03:59:50pm
பாட்னா ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பீகாரில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் திங்கள்கிழமை தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே அதிகாரிகள், போலீசாரை குவித்தனர். உடனடியாக ஸ்டேஷனில் உஷார்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.ஆனால், சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வதந்தி என தெரியவந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாட்னா ரயில் நிலைய பொறுப்பாளர் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via
Logo