ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், ஓட்டுநர் என 4 பேர் பலி:

by Editor / 27-12-2022 10:58:26am
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், ஓட்டுநர் என 4 பேர் பலி:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடுமலை பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மடத்துக்கு ளத்தில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டாடா 407 வாகனமும் இவர்கள் சென்ற ஆம்னி வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் முத்து(57)  மடத்துக்குளம் (ஆம்னி ஓட்டுநர்), ஆசிபா பானு (35)  மடத்துக்குளம், ரசீதா பேகம் (55),சஸ்மிதா(10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.இஸ்மாயில் (14) ஆபத்தான நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். சடலங்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது.

 

Tags :

Share via