சென்னையில் அதிகாலை முதல் பல இடங்களில் பரவலாக மிதமான சாரல் மழை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து பிப்ரவரி 1ம் தேதி அன்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.
இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில், லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் சென்னையில் காலை முதல் பல இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
Tags :